Loading...
Paul Dhinakaran

ஆசீர்வதித்து ஆசீர்வாதமாயிருங்கள்!

Dr. Paul Dhinakaran
09 Feb
அநேக கஷ்டங்களினால் துன்புற்ற யோபைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். கஷ்டங்களின் மத்தியிலும் அவர் தேவன்மீது வைத்திருந்த விசுவாசத்தை விட்டுவிடல்லை. அவருடைய நண்பர்கள் விரும்பத்தகாத கருத்துக்களை பேசிய சூழ்நிலையிலும், அவர் தன் நண்பர்களுக்காக ஜெபித்தார். வேதனையளிக்கும் வார்த்தைகளால் பேசிய தன் நண்பர்களிடம் அவர் காட்டிய அக்கறை ஆச்சரியமானது. “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்” (யோபு 42:10) என்று வேதம் கூறுகிறது. இன்றைய தினத்திற்குரிய வாக்குத்தத்தம், “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்” (சங்கீதம் 41:1). இந்த வார்த்தையின்படியே ஒடிஸா மாநிலத்திலுள்ள டென்சாவில் வசிக்கும் பீனா குரியா அற்புதத்தை பெற்றார். அந்த சகோதரியின் சாட்சியை கீழே தந்திருக்கிறேன். அதை வாசித்து, தேவன் ந;மமுடைய நற்கிரியைகளுக்கு எவ்வாறு பலனளிக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கடந்த ஏழு வருடங்களாக நான் செரிமான குறைபாட்டினால் அவதிப்பட்டு வந்தேன். அஜீரணத்தினால் அடிக்கடி எனது வயிறு வீங்கிவிடும். நான் மிகவும் கலங்கிப்போயிருந்தேன். இந்தக் கூட்டத்திற்கு வருவதற்குமுன், தேவன் என் பெயரை அழைத்து என்னை முழுவதுமாக குணமாக்க வேண்டும் என்று ஜெபித்தேன். சகோதரன் பால் தினகரன் அவர்கள் ஜெபித்தபோது, நானும் அவரோடு இணைந்து ஜெபித்தேன். அதே நேரத்தில் சகோ. பால் தினகரன் அவர்கள் என் பெயரை அழைத்து, “பீனா, தீய சக்தியினாலும் அஜீரணத்தினாலும் அலைக்கழிக்கப்படுகிறீர்கள். எந்த ஆகாரமும் உங்கள் வயிற்றில் தங்குவதில்லை. நீங்கள் உங்கள் சுகத்திற்காக அழுது கொண்டிருக்கிறீர்கள். கர்த்தர் உங்கள் பெயரை எனக்கு காட்டுகிறார். பீனா, அவர் உங்களிடம் வருகிறார். அநேகரை நீங்கள் நினைவுகூர்ந்தபடியால், பல குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தபடியால், ஆண்டவர் உங்கள் வாழ்வை இன்று மாற்றுகிறார். இயேசு உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை இன்றே விடுவிக்கிறார். அவர் தமது வல்லமையால் உங்களை நிரப்பி, உங்களை விடுவிக்கிறார்” என்றார். அந்த நேரத்தில் தேவ தொடுதலை நான் உணர்ந்தேன். என் முழு சரீரத்திலும் மின்சாரம் பாய்வதைப்போன்ற உணர்வு ஏற்பட்டு நான் கீழே விழுந்தேன். நான் எழுந்தபோதோ, என் வலியிலிருந்து பூரண விடுதலை பெற்றேன். என் வயிறு லேசானது போல உணர்ந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பதாக, பொக்காரோவில் நடைபெற்ற ‘இயேசு அழைக்கிறார்’ கூட்டத்தில், சகோதரர் னு.ழு.ளு. தினகரன் அவர்களால் நான் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
நீங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் தேவன் நினைவில் வைத்திருக்கிறார். அவர் உங்களையும் உங்கள் நற்கிரியைகளையும் ஒருபோதும் மறக்கமாட்டார். அதற்கான பலனை இன்றைக்கு பெற்றுக்கொள்ளுங்கள். “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 25:40) என்று இயேசு கூறுகிறார். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்” (வெளிப்படுத்தல் 3:8) என்று உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார்.
Prayer:
அன்புள்ள பிதாவே,

எனக்கு பல தேவைகள் இருந்தாலும், என் நேரத்தையும், செல்வத்தையும், நல் வார்த்தைகளையும் மற்றவருடைய வாழ்க்கையில் விதைக்க அருள் செய்தருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் என்னை அதிகமாய் நேசிக்கிறீர் என்று நான் அறிவேன். என்னைக்குறித்து நீர் அதிகமாய் சிந்திக்கிறீர், உமது அனுமதியின்றி என்னுடைய ஒரு முடியும் தரையில் விழாது. என் கண்ணீரை உமது பாத்திரத்தில் சேகரித்திருக்கிறீர். உமது அற்புதத்தால் என்னை நிரப்பும். என்னில் காணப்படுகிற சோர்வை நீக்கி, உமது உற்சாகமான ஆவியினால் நிரப்பும். யோபுவுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தந்ததுபோல, என்னையும் இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் நிரப்பும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000