Loading...
Stella dhinakaran

கர்த்தருக்குக் காத்திருத்தல்!

Sis. Stella Dhinakaran
06 Oct
பிரியமானவர்களே! “எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்” (சங்கீதம் 22:4,5) ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்த நம்முடைய பெரியோர்கள், வெட்கப்பட்டுப்போகாதிருக்கும்படி ஆண்டவர் காப்பாற்றினார். அப்படியாய் நம்முடைய நம்பிக்கையை ஆண்டவர்மேல் வைக்கும்பொழுது அவர் நாம் வெட்கப்பட்டுப் போகாதபடி காப்பார். ஒவ்வொருநாள் காலையில் எழுந்ததும் ஆண்டவருடைய கரத்திலே நம்மை ஒப்புக்கொடுத்து, “நீரே என் நம்பிக்கை, என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும்” என்று சொல்லுங்கள். அப்பொழுது அவர் உங்களை வெட்கப்படுத்தவிடமாட்டார், ஒவ்வொருநாளிலும் நீங்கள்வெட்கப்படாதபடி, உங்களைக் காப்பார். கர்த்தருக்குக் காத்திருத்தல்!
 
“சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள், என்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மை தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக” (சங்கீதம் 69:6). உமக்காக காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று  இந்த வசனம் சொல்லுகிறது. கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து, “ஆண்டவரே எனக்கு பல பிரச்சினைகள் உள்ளன, நான் உபவாசமிருந்து, இந்தப் பிரச்சினைகளுக்காக நாள் முழுவதும் ஜெபிக்கப்போகிறேன்” என்று நீங்கள் காத்திருந்து, ஜெபிக்கும்பொழுது, கர்த்தர் அங்கு வருவார். உங்கள் பிரச்சினை எதுவாயிருந்தாலும் மாற்றிப்போடுவார்.
சில வருடங்களுக்கு முன்பு காருண்யாவில் பிரச்சினைகள் வந்தபொழுது, நாங்கள் கண்ணீர்விட்டோம்! பலர் அதற்காக ஜெபித்தார்கள், எங்கு பார்த்தாலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். ஆண்டவர் எல்லாருடைய ஜெபத்தையும் கேட்டார், எங்களை வெட்கப்படுத்தவிடவில்லை!  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" (ஏசாயா 40:31). ஒன்றுக்கும் கவலைப்படாதிருங்கள்! ஆண்டவருக்குக் காத்திருந்து. ஜெபிக்கும்பொழுது, அவர் உங்களை உயர்த்துவார். உங்கள் கணவரை மாற்றுவார், உங்கள் குடும்பத்தை உயர்த்துவார், உங்கள் பிரச்சினை எதுவாயினும் அதை மாற்றுவார்.
Prayer:
அன்பு இரட்சகரே!
இந்த உலகம் எவ்வளவு பயங்கரமான இருள் அந்தகாரத்திற்குள் கிடக்கிறதென்பதை அறிந்துகொண்டேன். பாவத்திற்கு ஏதுவான கனிகளை கொடுக்க வைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் உமக்காக காத்திருக்கிற மக்களோ புதுபெலனடைந்து எழும்புவார்கள் என்பதை விசுவாசிக்கிறேன். நான் இவ்வுலக வாழ்வில் இளைப்படைந்து போகாதபடிக்கு நீரே என்னை காத்தருளும். ஏற்ற வேளையில் என்னை உயர்த்தியருளும். இன்றே என் வாழ்வை உம்முடைய தூய இரத்தத்தால் கழுவி ஜீவனுக்கு ஏதுவான கனி கொடுக்கிற தெய்வீக வாழ்வை எனக்கும் தாரும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே,
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000