Loading...
Stella ramola

தேவனுடைய சிநேகிதராயிருங்கள்

Sis. Stella Dhinakaran
03 Aug
எனக்கன்பான அன்பு பிள்ளையே, தேவனுடைய வாக்குறுதியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, நமது தியானத்திற்காக ஆதியாகமம் 13:17 ம் வசனத்தை  நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த வசனம் "நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி; உனக்கு அதைத் தருவேன்" என்று கூறுகிறது. இந்த வாக்குறுதி ஆபிரகாமுக்கு வழங்கப்பட்டது. ஆபிரகாம் தேவனால்  தேரி ந்தெடுக்கப்பட்ட மனிதர். நீங்கள் யோசுவா 24: 2, 3  ம் வசனத்தை  வாசித்தால், ஆபிரகாமின் தகப்பனாகிய  தேராகு  அந்நிய தெய்வங்களை   பின்தொடர்வதையும் காணலாம். ஆனாலும்  தேவனுடைய இரக்கத்தைப்  பாருங்கள்.

சர்வவல்லமையுள்ள தேவன்  ஆபிரகாமை அவரது சினேகிதனாகவும், தன்னை பின்பற்றுபவராகவும், தன் மகனாகவும் தேர்ந்தெடுத்தார். ஆபிரகாம் முழு மனதுடன் தேவனைப் பின்பற்றத் தொடங்கினார், அவர் தேவனுடைய  சினேகிதரானார். II நாளாகமம் 20: 7, ஏசாயா 41: 8 மற்றும் யாக்கோபு 2:23 ஆகிய வசனங்களில் இதைக் குறித்து வாசிக்கலாம். ஆபிரகாம் தேவனை நேசித்ததால், அவர் எல்லா ஆசீர்வாதங்களையும் தருவேன் என்று அவனுக்கு உறுதியளித்தார். ஆதியாகமம் 13: 15-16ல், தேவன்  ஆபிரகாமிடம், "நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் ” என்று கூறுகிறார், என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதங்கள்!
நீங்களும் இதுபோல தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டாமா? ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். என் விலையேறப்பெற்ற பிள்ளையே, தேவன் தனது எல்லா ஆசீர்வாதங்களையும் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடன் நெருங்கிய ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது  நீங்களும் ஆபிரகாமை போல ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இப்போது, பரலோகத்திலிருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற தேவனை  நோக்கி, இந்த பிரார்த்தனையை விசுவாசத்துடன் ஏறெடுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. என் மீது கிருபையாயிரும். என் மீறுதல்கள் அனைத்தையும்  மன்னித்தருளும். நீ என்னை மிகவும் நேசிக்கிறீர் என்று எனக்குத் தெரியும். ஆபிரகாம் போல நானும் உம்முடன் நடக்கவும் பேசவும்  அருள் புரியும். நான் உமது மன்னிப்பைப் பெற்று என் வாழ்க்கையை உமது கரத்தில் அர்ப்பணிக்க  ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆண்டவரே உம்மோடு ஜக்கியமாயிருக்க உதவும். அளவில்லாமல் ஆசீர்வதியும்.
 
இயேசுவின்  நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே.
 
ஆமென்

For Prayer Help (24x7) - 044 45 999 000