Loading...
Evangeline Paul Dhinakaran

பரலோகத்திற்கு செல்ல தகுதியானவர்கள்

Sis. Evangeline Paul Dhinakaran
31 Jul
என் நண்பரே, இன்று கர்த்தர் உங்களுக்கு மிக அருமையான வாக்குறுதியை அளித்துள்ளார். இது 2 கொரிந்தியர் 1:22 லிருந்து வருகிறது, இது "அவர் நம்மை முத்தரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்."  என் நண்பரே இது பரிசுத்த ஆவியின் உத்தரவாதம். நீங்கள் எபேசியர் 1: 13 -வாசித்தால், "வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்" என்று வேதம் கூறுகிறது.

ஒருமுறை என் பிள்ளைகள்  சாம், ஷேரன் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய  ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் படம் பார்த்து முடித்த பிறகு, அவர்கள் என்னிடம் ஒரு விலையேறப்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அது என்னவென்று உங்களால் யூகிக்க முடியுமா? அவர்கள்,  “மம்மி, எங்களுக்கு அபிஷேகம் கிடைக்காவிட்டால், நாங்கள் பரலோகத்திற்கு செல்லமுடியாது இல்லையா?” என்று கேட்டார்கள். அவர்களின் புரிதல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக முக்கிய உண்மையை விளக்க இந்த வாய்ப்பைப் நான்  பயன்படுத்தினேன். நான் அவர்களிடம், “ஆம், நீங்கள் சொல்வது சரிதான். பரிசுத்த ஆவியானவரைப் பெற நீங்கள் தேவனிடத்தில் மன்றாட வேண்டும், அதன்பின்னர் தேவன் உங்களை பரலோகத்திற்குச் செல்ல தகுதியுடையவராக்குவார். ” உடனே, அவர்கள் மண்டியிட்டு, “ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியானவர் எங்களை நிரப்பட்டும்”என்று தேவனிடத்தில் மன்றாடினர்.
ஆம் நண்பரே, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார். தேவன் பரிசுத்த ஆவியானவரை முத்திரையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் தேவராஜ்யத்திற்குள் நுழைவோம் என்று அவர் உறுதியளிக்கிறார். இன்றும் கூட, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற ஜெபியுங்கள். சர்வவல்லமையுள்ள தேவன், பரிசுத்த ஆவியானவர் மூலமாக தனது முத்திரையை  இவன்/இவள்  தேவனுடைய பிள்ளை என்று தனது முத்திரையினால்  உங்களை முன் குறிப்பார்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
இன்றைய வாக்குறுதிக்கு நன்றி. இப்போதும் கூட, உமது ராஜ்யத்திற்குள் நுழைய என்னை தகுதியுடையவராக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பா, நீர் எல்லோரையும் சமமாக நேசிக்கிறீர். உமது வாக்குறுதிகளை நிறைவேற்றும். ஆண்டவரே,  உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும்.  பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்திற்குள் நுழையட்டும், உமது  முத்திரையால் என்னை முன்குறித்தருளும்.  ஆண்டவரே, அளவின்றி என்னை நிரப்பும். உமது அபிஷேகத்தை இப்போதே பெற எனக்கு உதவும். ஆண்டவரே, உமது வல்லமையினால் பரிசுத்த ஆவியின் வரங்களாலும்  என்னை நிரப்பும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
 ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000