பயத்தை வென்று பெரிய காரியங்களை காணுங்கள்
Sis. Evangeline Paul Dhinakaran
26 Jan
அன்பு நண்பரே, யோவேல் 2:21-ல் உள்ளது போல், நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். வசனம் இப்படியாக சொல்லுகிறது, “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.” ‘உங்களுக்குள்ளே பெரிய காரியங்களைச் செய்ய என்னை அனுமதியுங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவன் சொல்லுகிற மற்றோரு காரியம், நாம் பயப்படாமல் இருப்பதுடன், கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருவதுமாகும்.
இன்று, நாம் குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நாளிலும் தேவன் தமது வார்த்தையால் நம் தேசத்தை ஆசீர்வதிப்பதாக வாக்களிக்கிறார். இந்த தேசத்தில் பெரிய காரியங்களைச் செய்வதற்கு நாம் அவரை அனுமதிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நீங்கள் பயப்படாமல், மகிழ்ச்சியாயிருங்கள் என்பதும் அதே வார்த்தைகள் தான். ஒரு தம்பதியினரின் வாழ்க்கையில் தேவன் அதையே செய்தார். அவர்களுக்கு எழுபத்து நான்கு மற்றும் எழுபத்தி இரண்டு வயது. செல்வநாயகம் எனும் இந்த சகோதரன் இவ்வாறு சாட்சியளித்தார். “நான் ஒரு இதய நோயாளி, எனக்கும் நீரிழிவு நோய் உள்ளது. நானும் என் மனைவியும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோம். என் மனைவியை சேர்ப்பதற்கு ஒரு மருத்துவமனையிலும் அறைகள் காலியாக இல்லை. நான் அநேக மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருந்தேன். இரவில் மிகவும் தாமதமாக ஒரு மருத்துவமனையில் ஒரேயொரு அறையை மட்டுமே பெறமுடிந்தது. எங்கள் இருவருக்கும் எந்த நம்பிக்கையுமில்லை என்றும், எந்த விதமான சிகிச்சை கொடுத்தாலும் பலன்தர தாமதமாகும் என்றும் மருத்துவர் கூறினார். ஆனாலும், நான் நம்பிக்கையிழக்கவில்லை. நான் இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் பணியாற்றுகிறேன் என்பதற்காகவும், லட்சக்கணக்கானவர்களுக்காக ஜெபிப்பதாலும் சிறிதும் பயப்படவில்லை. நான் தொலைபேசி ஜெபகோபுரம் மூலம் ஜனங்களுக்காக ஜெபிக்கிறேன். அதனால், எத்தீங்கும் என்னைத் தொடாது, கர்த்தர் எங்களை நிச்சயமாகக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது என்றார்.” இதுவே அவரது நம்பிக்கையாக இருந்தது. இந்த சகோதரனுக்கு தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர் கனம்பண்ணி, கொரோனா நோயால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையின்மைக்கு எதிராக அவர்கள் இருவரையும் அற்புதமாகக் குணமாக்கினார்.

கடைசியில் இந்த சகோதரர் என்ன சொன்னார் தெரியுமா? “கர்த்தர் எனக்குப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். ஆண்டவரின் மகிழ்ச்சியினால் நான் நிரம்பியிருக்கிறேன்” என்று கூறி மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தார். நீங்களும் இதையே சொல்வீர்கள் நண்பரே. சங்கீதம் 126:3, கூறுகிறது, “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.” கர்த்தர் உங்களுக்கும், நம் தேசத்திற்கும் பெரிய காரியங்களைச் செய்வார்.
Prayer:
அன்பின் தகப்பனே,
உமது ஆசீர்வாதத்தின் கரம் என்மேல் வந்து எனக்காக மகத்தான அற்புதங்களைச் செய்யட்டும். மேற்கண்ட தம்பதியரை ஆசீர்வதித்து பாதுகாத்ததுபோல, என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் பாதுகாத்தருளும். என் வாழ்க்கையிலிருந்து பயத்தை அகற்றும். இந்திய தேசத்தை ஆசீர்வதித்து, எங்கள் தேசத்திற்கு பெரிய காரியங்களை செய்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.