Loading...

ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கிறீர்களா?

Stella Ramola
24 Jun
அன்பு  நண்பரே, ஏசாயா 60:22-ல் கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தம், “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” ஆம் நண்பரே, கர்த்தர் உங்களை வல்லமையுள்ள, பெரிய ஜாதியாக மாற்றப்போகிறார். இதற்கு என்ன  அர்த்தம்?  “நான் என்ன முயற்சி செய்தாலும், அதற்கான பலனை நான் பெறவில்லை, நான் கடினமாக உழைக்கிறேன், என் நேரம் மற்றும் முயற்சி அனைத்தும் வீணாகிறது. என் பிரயாசத்திற்கு ஈடாக எதுவும் கிடைக்கவில்லை. எனது ஆசீர்வாதத்திற்காக காத்திருந்தேன், என் தொழிலில் லாபத்திற்காக காத்திருந்து சோர்வடைந்துவிட்டேன். நான் விரும்பும் மதிப்பெண்களை பெறுவதற்கு அதிகமாக கடினப்பட்டு  படிக்கின்றேன்? நான் பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். என் உடல் ஆரோக்கியம் திரும்புமா? நான் மீண்டும் நலமாக இருப்பேனா? அல்லது "எனது படைப்பாற்றல் மற்றும் முயற்சியை நான் அதிகம் செலவழிக்கிறேன். ஆனால் எனது வேலையில் எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. நான் ஒரு குழந்தைக்காக பல வருடங்கள் முயற்சி செய்கிறேன், ஆனால், எனக்கு குழந்தை இல்லை" என்று நீங்கள் கூறலாம். உங்கள் ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கிறீர்களா? என் நண்பரே, அவர் உங்களை ஆசீர்வதித்து உங்களை ஒரு பெரிய ஜாதியாக்குவா வேன் என்று கர்த்தர் கூறுகிறார்.
இந்த உலகில் உங்களுக்கு யாருமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். இப்போது யாரும் உங்களை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்போது ​​​​நீங்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துக்கொள்வார்கள். நீங்கள் தலை நிமிர்ந்து நிற்ப்பீர்கள். அதைத்தான் வேதம் கூறுகிறது. “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2). அவர் உங்களை ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல்  நீங்கள் மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும் வகையில், உங்களை உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்துவார். ஆம், இன்று கர்த்தர் உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவார். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
Prayer:
அன்பின் தகப்பனே,

நீண்ட நாட்களாக ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும் என்னை ஆசீர்வதித்தருளும்! உம்மைத்தவிர எனக்கு உதவ யாருமில்லை. ஆண்டவரே, என்னை ஒரு பெரிய ஜாதியாக மாற்றும். என் வாழ்க்கையை முழுமையாக்கி, நிரம்பி வழியும் மகிழ்ச்சியால் என்னை நிரப்புவீராக. உமது வார்த்தையின்படியே என்னை ஆசீர்வதிப்பதற்காக நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000