Loading...
Paul Dhinakaran

பிரார்த்தனைக்கு பதில்

Dr. Paul Dhinakaran
01 Aug
என் விலையேறப்பெற்ற நண்பரே, இந்த மாதத்திற்கான தேவனுடைய வாக்குறுதியை உங்களிடத்தில் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது . கடந்த மாதங்களை கடந்து வரும்படி தேவன் கிருபை செய்தார், "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது " (புலம்பல் 3: 22, 23) என்று வேதம் கூறுகிறது, இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! தேவனுடைய கிருபைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம். ஆகஸ்ட் மாதத்திற்கான வாக்குறுதி வார்த்தை I சாமுவேல் 1:17 லிருந்து எடுக்கப்பட்டது. “நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.”

பிரதான ஆசாரியரான ஏலி, அன்னாள் என்ற பெண்ணுடன் பேசிய வார்த்தைகள் இவை. அன்னாளுக்கு குழந்தை இல்லை. அவளது கணவர் அவளை மிகவும் நேசித்தார், ஆனால் அவள் கருத்தரிக்காதலால், அவளது சக்களத்தி அவளை மிகவும் ஏளனமாய்  கேலி செய்தாள். அன்னாளின் இதயம் உடைந்து போகும். தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அவளது கணவனும் குடும்பத்தினரும் தேவனுடைய ஆலயத்திற்குச் சென்றபோது, அன்னாள்  தனியாகக் ஆலயத்திற்கு வந்து கர்த்தருக்கு முன்பாக  தன் இருதயத்தை ஊற்றினாள். அவளுடைய துக்கத்தையும் அவமானத்தையும் அவளால் தாங்க முடியவில்லை, ஆனாலும் அவள் வாய் திறவாமல், சத்தமாக அழாமல். தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள், அவள் உதடுகள் மட்டும் அசைந்தன. ஆனால், அவளுடைய குரல் கேட்கவில்லை. மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (I சாமுவேல் 16: 7) என்று வேதம் கூறுகிறது.
அவள் தேவனிடத்தில்  பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, ஏலி அவளைக் கவனித்துக்கொண்டிருந்தான். நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள், "அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ. நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான் (I சாமுவேல் 1:17). தேவனுடைய மூன்று பண்புகளை இந்த வசனத்தில் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். ஆம்! அவர் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் ஒரு தேவனாக இருக்கிறார். நீங்கள் கேட்பதை அவர் வழங்குகிறார், ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நீங்கள் சமாதானமாய்  அனுபவிக்க செய்கிறார். இந்த மாதம் தேவன் உங்களுக்காக இதைச் செய்வார்.
Prayer:
அன்பின் தகப்பனே,
 
இந்த மாதத்தின் ஆசீர்வாத வார்த்தைக்கு நன்றி கூறுகிறேன். என் குடும்பத்தையும் என்னையும் நீர்  ஆசீர்வதிப்பதால் உமக்கு ஸ்தோத்திரம். உமது அதிசயங்களை மற்றவர்களுக்கு அறிவிக்க என்னை உபயோகியும். இம்மாதத்திலும் கூட, உமது சித்தத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உமக்கு முன்பாக  என் உடன்படிக்கையை நிறைவேற்ற அருள் புரியும். இம்மாதத்திலும் என்னை ஆசீர்வதியும். எல்லா துதியும் மகிமையையும் உமக்கே செலுத்துகிறேன்.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன்,
 
ஆமென்

For Prayer Help (24x7) - 044 45 999 000