Loading...
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1 யோவான் 4:4)
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். (எண்ணாகமம் 6:25)
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும். (எசேக்கியேல் 37:27)
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். (ஏசாயா 45:2)
சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன். (எசேக்கியேல் 20:41)
உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. (கொலோசெயர் 3:3)
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. (சங்கீதம் 103:2)
அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். (ஏசாயா 65:24)
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5)
கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். (நீதிமொழிகள் 13:13)
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ...அதைச் செய்வேன். (யோவான் 14:13)
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்பனியா 3:15)
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். (சங்கீதம் 9:9)
நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். (சங்கீதம் 61:3)
என் தேவன்...உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (பிலிப்பியர் 4:19)
அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. (சங்கீதம் 34:5)