நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன். ஏசாயா 29:14
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தியர் 5:21
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே ...உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். உபாகமம் 1:30
அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன். ஏசாயா 45:4
ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். நீதிமொழிகள் 16:23
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:3
சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66:2