Loading...
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். (சங்கீதம் 34:17)
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார். (சங்கீதம் 146:9)
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். (சங்கீதம் 145:18)
உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். (ஏசாயா 60:15)
அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:6)
ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். (ரோமர் 8:26)
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன். (நீதிமொழிகள் 8:17)
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதியாகமம் 12:3)
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். (1 பேதுரு 2:24)
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28
இனித் தீங்கைக் காணாதிருப்பாய். (செப்பனியா 3:15)
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். (எண்ணாகமம் 6:24)
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம். (உபாகமம் 33:27)
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். (ஆதியாகமம் 12:2)
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார். (உபாகமம் 32:13)
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். (சங்கீதம் 84:7)