Loading...
எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான். நீதிமொழிகள் 28:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 28:8
உங்கள் கிரியையையும் ...தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. எபிரெயர் 6:10
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:23
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங்கீதம் 103:13
திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். சங்கீதம் 55:18
அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். அப்போஸ்தலர் 17:28
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். சங்கீதம் 18:30
ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2 கொரிந்தியர் 3:18
நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன். ஏசாயா 54:7
அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது. எரேமியா 20:9
தேவனாலே பராக்கிரமம் செய்வோம். சங்கீதம் 60:12
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள் 15:8
நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. நீதிமொழிகள் 14:22
கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப்பாடுவேன். சங்கீதம் 13:6
ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 1 யோவான் 2:1