Loading...
அவர் ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். (தானியேல் 2:21)
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து எழும்புவார்கள். (ஏசாயா 40:31)
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. இதற்கென்றே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். (கொலோசெயர் 3:15)
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார். (சங்கீதம் 107:8)
அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். (சங்கீதம் 91:4)
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். (எரேமியா 31:14)
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். (நீதிமொழிகள் 18:10)
உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை. (உபாகமம் 11:25)
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)
வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். (யோவேல் 2:25)
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர். (1 நாளாகமம் 29:12)
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். (லேவியராகமம் 26:9)
உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள். (லூக்கா 10:20)
இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர். (சங்கீதம் 68:35)
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார். (1 சாமுவேல் 2:9)
ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:11)