நம்மில் வாசமாயிருக்கிற ஆவியனாவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்கோபு 4:5)
உங்களுக்கு நவமான இருதயத்தை கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன். (எசேக்கியேல் 36:26)
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். (கலாத்தியர் 5:16)
தேவன் உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் கொழுமையையும்...தந்தருளுவாராக. (ஆதியாகமம் 27:28)
அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3)
2. ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதியாகமம் 15:1)
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி. (சங்கீதம் 103:4)