வெளிப்படுத்தப்பட்டது; உரைக்கப்பட்டது; நிறைவேற்றப்பட்டது
பூமி முழுவதும் ஒவ்வொரு விநாடியும் முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், இயற்கை அல்லது அன்றாட வாழ்க்கை என்று ஏதாவது ஒருவகையில் சம்பவங்கள் நடக்கின்றன. நடப்பவை எல்லாம் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியாது. சர்வவல்ல ஆண்டவர், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவர். ஆகவே அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
தேவன் தம் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு அவரது திட்டங்களை வெளிப்படுத்துகிறார் (ஆமோஸ் 3:7); அவர்கள் அதை ஜனங்களுக்கு உரைக்கிறார்கள். தேவ மனிதராகிய Dr. பால் தினகரன், சர்வவல்ல ஆண்டவர் அவருக்கு வெளிப்படுத்திய பல்வேறு தீர்க்கதரிசனங்களை உரைத்திருக்கிறார். தேவன் அவற்றுள் பலவற்றை இதுவரை நிறைவேற்றியிருக்கிறார். இன்னும் நிறைவேறிய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. அவ்வாறு நிறைவேறியவற்றுள் சில தீர்க்கதரிசனங்கள் உங்கள் பார்வைக்கு...
Prophecy For 2021
ஆப்கானிஸ்தான் பிரச்னையும் ரஷ்யாவின் செல்வாக்கும்
உரைக்கப்பட்டது 2021 (ஜனவரி)
மத்திய கிழக்கு நாடுகளில் தேவனின் கரம் ஜனங்கள்மேல் வரும். விசேஷமாக, ஆப்கானிஸ்தான் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியை அனுபவிக்கும். இது பாகிஸ்தான், துருக்கி மற்றும் சுற்றிலுமிருக்கிற தேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மையும் நிலையற்ற செயல்பாடுகளும் காணப்படும். ரஷ்யாவின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நம் கண்கள் சீனாவின்மேல் இருக்கவேண்டும். எல்லா இடங்களிலும் தேவ கரம் மேற்கொள்ளும். ஜனங்கள் ஆண்டவரிடம் திரும்புவது தொடரும். ஜனங்கள் தேவனை நோக்கி வெளியரங்கமாய் கூப்பிடுவதற்கான வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் பெரிய வல்லமையோடு அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் எல்லா இடங்களிலும் செய்வார்
நிறைவேறுதல் 2021 (ஆகஸ்ட்)
ஏறத்தாழ இருபதாண்டு போருக்குப் பிறகு மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை ஆகஸ்ட் மாதத்தின் மைய நாட்களில் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு வீழ்ந்துவிட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் 90 நாட்களில் பிடிபடும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கணித்திருந்தவேளையில் பத்து நாட்களுக்கும் குறைவான காலத்தில் அது கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆப்கனிலிருந்து தங்கள் படைகளை திரும்ப பெற்றுள்ள நிலையில் தஜிகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் இராணுவ வாகனங்களும் பீரங்கிகளும் தென்படுகின்றன. மத்திய ஆசிய பகுதியில் ரஷ்யாவின் வலிமை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஊடக செய்திகள்
https://www.cnbc.com/2021/08/
https://asia.nikkei.com/
https://www.nytimes.com/2021/
https://www.news18.com/news/
இந்தியாவில் வெள்ளம்
உரைக்கப்பட்டது 2021 (ஜனவரி)
ஆசியாவில் / இந்தியாவில் பல்வேறு விதமான வெள்ளங்கள் வரும். ஆனால் தேவன் உலக இரட்சகராகிய தம்மை நோக்கி கதறும்படி ஜனங்களின் இருதயங்களை திருப்புவார். பெரிதான மாற்றங்கள் உண்டாகும்.
நிறைவேறுதல் 2021 (ஆகஸ்ட் & செப்டம்பர்)
அஸ்ஸாம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு.
சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் பிரமபுத்திரா நதியிலும் அதன் துணை நதிகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பல இடங்களில் அபாய மட்டத்திற்கும் மேலாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அஸ்ஸாமின் 34 மாவட்டங்களுள் 22 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் பெய்த கனமழையின் காரணமாக ரப்தி மற்றும் புர்ஹி ரப்தி ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து உத்தரபிரதேசத்தின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாக்கப்படவும், தாங்கள் இழந்தவற்றை இரட்டிப்பாய் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் நாம் ஜெபிப்போம் (ஏசாயா 43:2)
Ref links:
https://thediplomat.com/2021/09/the-brahmaputras-raging-waters-wreak-havoc-in-assam/
Prophecy For 2020
Prophecy For 2019
இந்தியா - வர்த்தகம்
உரைக்கப்பட்டது 2019 (ஜனவரி)
இந்தியா, உலக பெரும் வர்த்தக தலைவர்கள் வந்து முதலீடு செய்து வளர்ச்சி காணும் இடமாக விளங்கும்
நிறைவேறுதல் 2019 (அக்டோபர்)
எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் பொருளாதார முன்னேற்றத்துக்கான 10 காரணிகளில் 4 காரணிகளில் நன்கு செயல்பட்டு எளிதாக தொழில் தொடங்குவதற்கான சூழலை தக்கவைத்து பட்டியலில் இந்தியா ஏறுமுகம் கண்டுள்ளது.
Ref links:
https://www.businesstoday.in/
https://www.newindianexpress.
Prophecy For 2018
வட கொரியா, தென் கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி
வடக்கு மற்றும் தென் கொரியா தேசங்கள் மத்தியில் ஓர் ஒற்றுமை உருவாகும். தங்கள் மத்தியில் என்னுடைய மகிமையை காட்டும்வண்ணம் இவை இணைந்து செயல்படும்.
1950 - 1953 கால கட்டத்தில் நடந்த கொரிய போர், தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக நின்றது. ஆகவே, இரண்டு கொரிய தேசங்களிடையே போர் மூட்டம் காணப்பட்டது. 2018 செப்டம்பர் 18ம் தேதி பியோங்யாங்கில் நடந்த உச்சிமாநாட்டில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அனைத்தும் இல்லையென்றாலும் இருநாடுகளுக்கும் இடையேயான சில நீண்டகால பிரச்னைகளுக்கான தீர்வு இந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டது. ஆனால், இது விரைவிலேயே முறிந்துவிட்டது. இருநாடுகளுக்கிடையேயான ஒரு மாநாடு தோல்வியில் முடிந்ததால் தென் கொரியாவுடனான நேரடி தொலைபேசி இணைப்பை (hotline)2020 ஜூன் மாதம் வட கொரியா துண்டித்தது. பின்னர் வட கொரியா, இரு தேசங்களுக்கிடையேயான எல்லையில் ஓர் அலுவலகத்தை திறந்தது. அது இருநாடுகளுக்கிடையேயான தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட காரணமாகியது. வட கொரியா மற்றும் தென் கொரியா தேசங்களுக்கிடையே 2021 ஜூலை 27ம் தேதி காலை 10 மணி முதல் மீண்டும் நேரடி தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Prophecy For 2017
Prophecy For 2016
சீனா - கொரோனா கொள்ளைநோய்
கிழக்குப் பகுதி மட்டுமல்ல, சீனாவுக்குள்ளும் கொள்ளைநோய் பரவும். தேசம் எங்கும் நோய் பரவும்போது, யாரும் உதவிசெய்ய இலாத நிலையில் அவர்கள் என்னை நோக்கிக் கதறுவார்கள். அப்போது என்னுடைய கிருபை விளங்கும். தேசத்தின் மக்கள் மீட்கப்படுவார்கள். என்னுடைய சுகமளிக்கும் பிரசன்னம் சீன தேசமெங்கும் பாய்ந்து செல்லும். அப்போது நானே அவர்களுடைய ஒரே இரட்சகர் என்றும், ஒரே மீட்பர் என்றும் அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
2019 டிசம்பர் 31ம் தேதி, சீனா, உலக சுகாதார அமைப்பிடம் (WHO)ஹூபே மாகாணத்தில் உஹான் நகரத்தில் காரணம் தெரியாமல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தது. உஹான் நகரைச் சேர்ந்த சிலர் 2019 டிசம்பர் 8ம் தேதி முதல் நிமோனியாவை போன்ற சுவாச பிரச்னையால் அவதிப்பட்டனர். இதற்குக் காரணமான 2019-nCoV வைரஸானது சாதாரண சளி முதல் தீவிர சுவாச பிரச்னை அல்லது 2002-2003 ஆண்டுகளில் 800க்கும் அதிகமானோரை பலி கொண்ட சார்ஸ் (SARS)நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் வைரஸ் இனத்தை சேர்ந்ததாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து, புதிய கூட்டமைப்புகள் உருவாகும்.
நிறைவேறுதல் 2016 & 2020
தங்கள் பெரும் வர்த்தக பங்காளரான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக 2020 ஜனவரி 31 முதல் வெளியேறுவதற்கான வாக்களிப்பு 2016ம் ஆண்டு நடந்தது. 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பெர்க் ஆகிய ஆறு நாடுகளும் 1956 கையெழுத்தாகிய ரோம் உடன்படிக்கையின்படி ஐரோப்பிய பொருளாதார சமூகம் என்னும் பொது சந்தை உருவானது. ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாய் இருப்பதை பிரிட்டன் கண்காணித்து வந்தது.
"இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான்" (எசேக்கியேல் 12:27)
இவை அனைத்தையும் தம் ஊழியரான Dr. பால் தினகரனுக்கு வெளிப்படுத்தியதுடன், அவற்றை நிறைவேற்றி அவரது வார்த்தைகளை கனப்படுத்திய தேவனை துதிப்போம். Dr. பால் தினகரன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட மற்ற தீர்க்கதரிசனங்களையும் தேவன் நிறைவேற செய்யும்படி தொடர்ந்து ஜெபிப்போம்.