உங்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கும் நீதிமான்களுக்கு புத்தாண்டில் உங்கள் வெகுமதி!
இனி எங்களால் எதுவும் செய்யமுடியாது..."
- மருத்துவர் கைவிட்ட பின்னர் குழந்தை ஸ்ரீ நவநிதியின் நிலை என்ன ஆனது?
"ப்ளேட்லெட் எண்ணிக்கை 14,000 தான் இருக்கிறது. இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது. வேண்டுமானால் வேறு பெரிய மருத்துவமனைக்கு பிள்ளையை கொண்டுபோய் பாருங்கள்," மருத்துவர் கூறியபோது அதிர்ந்துபோனார்கள் ராஜேந்திரன் - மேகலாதேவி தம்பதியர்.
சேலம் அம்மாபேட்டையில் வசித்து வரும் ராஜேந்திரன் - மேகலாதேவி தம்பதியருக்கு ஸ்ரீ நவநிதி, மௌரிஸ் என்று இரண்டு குழந்தைகள்.
சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தை ஸ்ரீ நவநிதிக்கு வந்த டெங்கு காய்ச்சல் துயரத்துக்குள் தள்ளியது.
குழந்தைக்கு காய்ச்சல் வந்ததும் மருத்துவமனையில் காட்டினர். சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று மருத்துவர் சிகிச்சையை ஆரம்பித்தார். ஆனால் மூன்று நாட்கள் கடந்து காய்ச்சல் குணமாகவில்லை.
மருத்துவ பரிசோதனையில் குழந்தை ஸ்ரீ நவநிதிக்கு வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என தெரிய வந்தது. இரத்தத்தில் ஒன்றரை லட்சம் இருக்கவேண்டிய இரத்த தட்டணுக்களின் (platelets)எண்ணிக்கை 40,000 ஆக குறைந்திருந்தது.
"காப்பாற்றிவிடலாம்... தைரியமாயிருங்கள்..." என்று மருத்துவமனையில் கூறி சிகிச்சை கொடுத்தனர். குழந்தை ஸ்ரீ நவநிதியின் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் 30,000 ஆக குறைந்தது. இந்த நிலையில்கூட நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார் மருத்துவர்.
மறுநாள் இரத்த தட்டணுக்கள் 14,000 ஆக குறைந்துபோனதும், குழந்தையின் நிலை கவலைக்கிடமானது. குழந்தையின் உடல் வீங்கிவிட்டது. சிறுநீர் பிரியவில்லை. அதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் ராஜேந்திரனும் மேகலாதேவியும் செய்வதறியாது திகைத்தனர்.
"குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது. வேறு பெரிய மருத்துவமனைக்கு வேண்டுமானால் கொண்டு செல்லுங்கள்," என்று மருத்துவர் கூறினார்.
மருத்துவமனையில் குழந்தை இருந்த அறையிலேயே உடைந்துபோய் உட்கார்ந்திருந்தனர் பெற்றோர். அந்த நேரம் குழந்தை ஸ்ரீ நவநிதியின் தாய் மேகலாதேவிக்கு 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரம் நினைவுக்கு வந்தது.
குழந்தை படுத்திருந்த அறையிலிருந்தே 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்கள்.
மறுமுனையில் பேசிய சகோதரியிடம் குழந்தையின் நிலையை கூறி, ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள் மேகலாதேவி. அந்த ஜெப வீராங்கனை, விசுவாசத்துடன் ஊக்கமாக குழந்தை ஸ்ரீ நவநிதிக்கு ஆண்டவர் சுகத்தை அருளவேண்டுமென ஜெபித்தார்கள்.
அதுவரை கண் திறக்காமல் துவண்டுபோய் படுத்திருந்த ஸ்ரீ நவநிதி, ஜெபித்து முடித்து சில நிமிடங்களுக்குள் கண்களைத் திறந்தாள். "அம்மா, யூரின் போகணும்," என்றாள்.
நடப்பதை தாய் மேகலாதேவிக்கு நம்ப இயலவில்லை. அதுவரை சிறுநீர் பிரியாமல் இருந்து வந்தநிலையில், குழந்தை சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக இருந்தது.
சிறுநீர் கழித்தபிறகு ஸ்ரீ நவநிதியை பரிசோதித்த மருத்துவர், "இனி பயமில்லை" என்று கூறினார்.
சிகிச்சை முடிந்து, பூரண சுகம் பெற்று பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டாள் ஸ்ரீ நவநிதி.
குடும்பமாக சேலத்திலுள்ள 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்திற்கு நேரில் சென்று சாட்சி கூறி ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள் ராஜேந்திரன் - மேகலாதேவி தம்பதியர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் செய்த இந்த அற்புதத்தை இப்போதும் அவர்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
குழந்தை ஸ்ரீ நவநிதி, புதுவாழ்வு பெற்றதுபோன்று, 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் ஜெப வீரர்கள் ஏறெடுக்கும் பிரார்த்தனையின் மூலம் அநேகர் புதுவாழ்வு பெற்று வருகின்றனர்.
ஜெப கோபுர ஊழியம்
"இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" (வெளிப்படுத்தல் 21:5)
"வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது" என்று மனமுடைந்த மக்கள், 'இயேசு அழைக்கிறார்' ஜெப வீரர்களோடு இணைந்து ஜெப கோபுரத்தில் ஜெபிக்கும்போது ஆண்டவர் அவர்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்து புதிய ஆசீர்வாதங்களை அருளுகிறார்.
கடன் பாரத்தால் அழுத்தப்பட்டு, நிம்மதியிழந்து தவிக்கும் மக்கள் ஜெப கோபுரத்திற்கு வந்து ஆண்டவரின் பாதத்தில் தங்கள் கவலைகளை வைத்து, ஜெப வீரர்களோடு இணைந்து ஜெபிக்கும்போது கர்த்தர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, கடன் பாரத்தை அகற்றுகிறார்.
பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் விடுதலை நாடி ஆண்டவரண்டை வந்து, ஜெப கோபுரத்தில் ஜெபிக்கும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவர்களை விடுவிக்கிறார்.
கவலையோடு வருபவர்களோடு இணைந்து ஆண்டவரிடம் மன்றாட ஆவியின் அபிஷேகமும், விசேஷித்த பயிற்சியும் பெற்ற ஜெப வீரர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
ஆண்டவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்கள் நன்றி காணிக்கையாய் கொடுக்கும் நன்கொடைகளைக் கொண்டே ஜெப வீரர்களுக்கும், ஜெப வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் ஆண்டவர் ஜெப வீரர்களின் ஜெபத்தை கேட்டு உங்கள் வாழ்வில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, புத்தாண்டில் ஜெப வீரர்களுக்கு வெகுமதி அளித்திடுங்கள்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்கள், சிறுபட்டணங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்கள் இயங்கி வருகின்றன.
தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி நேரில் வருவோருக்கு இலவசமாக ஜெப சேவை அளிக்கப்படுகிறது.
இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்களில் வணிக ஆசீர்வாத கூட்டம், பெண்கள் ஆசீர்வாத கூட்டம், அபிஷேக கூட்டம், குடும்ப ஆசீர்வாத கூட்டம், வாலிபர் கூட்டம், சிறுவர் ஆசீர்வாத கூட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அநேகர் அவற்றில் கலந்துகொண்டு ஆண்டவரின் அற்புத தொடுதலை உணர்கிறார்கள்.
கர்த்தரின் பாதத்தில் தனித்து தியானம் செய்ய தியான அறைகள் ஜெப கோபுரங்களில் உள்ளன. தியான அறையில் அமர்ந்து தாங்களாக ஜெபித்து, தெய்வீக சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் ஜனங்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
"வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்" (சங்கீதம் 65:11)
தொலைபேசி ஜெப உதவி: இரவும் பகலும் இடைவிடாத இலவச சேவை
இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வோரின் அழைப்புகளை ஜெப வீரர்கள் ஏற்று ஜெபிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் பிரார்த்தனை சேவை வழங்கப்படுகிறது.
வியாதி மற்றும் நோயிலிருந்து சுகம் பெறுவதற்கு, அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, விபத்து நேரங்களில், பொருளாதார நெருக்கத்தின்போது, தேர்வு நேரத்தில், தம்பதியரிடையே கருத்துவேறுபாடு வரும்போது, குடும்ப உறவுகளில் பிரச்னை எழும்போது என்று எந்தச் சூழலில் ஜெப உதவி தேவைப்பட்டாலும் தொலைபேசி மூலம் ஜனங்கள் தொடர்பு கொண்டு ஜெப உதவி பெறுகின்றனர். ஆண்டவர் ஜெபத்தை கேட்டு, அற்புதங்களை, அதிசயங்களை மக்கள் வாழ்வில் நடப்பிக்கிறார்.
ஜெபக் குறிப்புகளுக்காக 24 மணி நேர சங்கிலி ஜெபத்திலும் பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது.
"ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16)
ஜெப கோபுரங்கள் மூலம் ஆண்டவர் செய்த பல்லாயிரக்கணக்கான அற்புதங்களுள் இரண்டு சாட்சிகளை இங்கே கொடுத்துள்ளோம். உங்களுக்குத் தேவையான அற்புதத்தை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படியாக இந்தச் சாட்சிகள் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தும்.
16 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியம்
என் மகள் சுகந்திக்கு 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவள் கணவரோடு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசித்து வருகிறாள். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் என் மகள் மருத்துவ ஆலோசனைக்குச் சென்றாள். என் மகளின் கருப்பை சிறிய அளவில் இருப்பதாகவும் அதனால் கருவுண்டாகி சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுவதாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாக என் மகள் சுகந்தி மன உளைச்சல் அடைந்தாள். உறவினர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க இயலாமல் தவித்தாள். அவளுக்கு பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்பட்டன. 2020ம் ஆண்டு இயேசு அழைக்கிறார் தொலைபேசி ஜெப கோபுரத்தை தொடர்பு கொண்டு என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆண்டவர் என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளினால் அவளை 'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்திற்கு அழைத்து வந்து தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக சாட்சி கூறுவதாக பொருத்தனை செய்து ஜெபித்தேன்.
'இயேசு அழைக்கிறார்' ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கப்பட்ட பிரார்த்தனைகளுக்கு ஆண்டவர் செவிகொடுத்து, என் மகளின் கர்ப்பத்தை ஆசீர்வதித்தார். அவளுக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தொலைபேசி ஜெப கோபுர ஜெப வீரர்களுக்கும், Dr. பால் தினகரன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.
- மஞ்சுளா, போரூர், சென்னை.
அசுத்த ஆவியிலிருந்து விடுதலை
என்னுடைய அம்மா பெயர் புஷ்பரத்தினம். அவர்களுக்கு 75 வயதாகிறது. திடீரென அவர்களை அசுத்த ஆவி பிடித்தது. அவர்கள் செயல்களில் வித்தியாசம் தென்பட்டது. தலையை சுவற்றில் மோதுவார்கள்; வலிப்பு ஏற்படும்; தரையில் உருண்டு புரளுவார்கள். அவர்களது நிலை ஆபத்தாக இருந்தது. இரவில் திடீரென இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதால் உதவியின்றி தவித்தேன். ஒருநாள் இரவு, அவர்கள் அசுத்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டபோது 'இயேசு அழைக்கிறார்' தொலைபேசி ஜெப கோபுரத்திற்கு தொடர்பு கொண்டேன். ஜெப வீரரிடம் என் தாயாருக்கு அசுத்த ஆவியிலிருந்து விடுதலை கிடைக்கும்படி ஜெபிக்கக் கேட்டுக்கொண்டேன். ஆண்டவர் ஜெபத்தைக் கேட்டு என் தாயாரை பூரணமாக விடுதலையாக்கினார். தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக. என் தாயாருக்காக ஜெபித்த ஜெப வீரர்களுக்கு நன்றி.
- ஜெசிந்தா, புதுக்கோட்டை.
இந்திய தேசத்திற்காக 24 மணி நேர தீர்க்கதரிசன பிரார்த்தனை
புது டெல்லியில் அமைந்துள்ள தேசிய ஜெப கோபுரத்தில் 24 மணி நேரமும் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்காக, செழிப்புக்காக, நல்லாட்சிக்காக, ஆட்சியாளர்களுக்காக ஜெப வீரர்கள் ஜெபிக்கின்றனர்.
இஸ்ரேல் தேசத்தில் பிரார்த்தனை
ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் ஜெப கோபுரத்தில் இஸ்ரேலின் சமாதானத்திற்காகவும், உலக மக்களை ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக்கும்படி உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஜெப வீரர்கள் வந்து பிரார்த்தனை ஏறெடுக்கின்றனர்.
பல்வேறு வழிகளிலும் ஜெபக் குறிப்புகளை அனுப்புவோர், நேரடியாக ஜெப கோபுரங்களுக்கு வருகை தருவோர் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வோர் அனைவருக்கும் ஜெப கோபுரங்களில் ஜெப சேவை வழங்கப்படுகிறது.
ஊழிய பங்காளர்கள் மிகுந்த தியாகத்துடன் அளிக்கும் காணிக்கைகளில் உதவியால் ஜெப கோபுரங்கள் இயங்கும் கட்டடங்களுக்கான வாடகை, மின்சார கட்டணம், தொலைபேசி இணைப்பு கட்டணம், கணினி மற்றும் கட்டட பராமரிப்பு, அலுவலக செயல்பாட்டு செலவுகள் ஆகியவை சந்திக்கப்படுகின்றன. உங்கள் காணிக்கையால் மட்டுமே இந்தச் சேவைகளை இலவசமாக வழங்க முடிகிறது.
நேரடி ஜெப சேவையிலும், தொலைபேசி ஜெப சேவையிலும், கடிதங்களுக்கு ஜெபத்தோடு பதில் எழுதுவதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகை மற்றும் சமூக ஊடக பதிவுகளை செய்வதிலும் 525-க்கும் மேற்பட்ட முழு நேர ஜெப வீரர்கள் ஊழியம் செய்கின்றனர்.
நேரடி மற்றும் தொலைபேசி இரண்டு ஜெப சேவையிலும் சேர்த்து ஏறத்தாழ ஆயிரம் தன்னார்வ ஜெப வீரர்கள், ஜெப வீராங்கனைகள் ஊழியம் செய்கின்றனர்.
நீங்கள் தொடர்ந்து இச்சேவையை தாங்கும்போது, ஆண்டவர் இந்த ஆத்துமாக்களை உங்கள் கணக்கில் சேர்ப்பார்; உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.
ஜெப கோபுர ஊழியத்தை தாங்கி கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக திகழும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்..." (ஏசாயா 43:18,19 )
நீதிமான்களுக்கு புத்தாண்டு பரிசு
புத்தாண்டின் சந்தோஷத்தை யாருடன் பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள்?
இரவு பகல் எந்நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்று உங்கள் ஜெபக் குறிப்புகளை கருத்துடன் கேட்டு,
பரிசுத்த ஆவியால் நிறைந்து, உங்களுக்காய் ஆண்டவரிடம் பரிந்துபேசி ஜெபித்து,
அற்புதங்களை பெற்றுக்கொள்ள துணை நிற்கும் நீதிமான்களாகிய ஜெப வீரர்களுக்கு புத்தாண்டு வெகுமதி வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.
இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்? (1 நாளாகமம் 29:5)
இந்த இணைப்பை பயன்படுத்தி இயேசு அழைக்கிறார் ஜெப சேவையை தாங்குங்கள்; கோடிக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக விளங்குங்கள்!
ஜெப வீரர்களுக்கு புத்தாண்டு கிஃப்ட் என்று குறிப்பிட்டு உங்கள் நன்கொடைகளை உங்கள் பகுதியில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் வழங்கலாம் (அல்லது)www.jesuscalls.org என்ற இணையதளத்தை பயன்படுத்தி இயேசு அழைக்கிறார் ஜெப சேவையை தாங்கலாம்.
044-23456677 என்ற பங்காளர் சேவை எண்ணில் காலை 7 முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொண்டு நன்கொடை வழங்கும் ஏனைய வழிகளை தெரிந்து கொள்ளலாம்.
புதிதான ஜீவனால் நம்மை நிரப்பும் ஆண்டவர் இயேசு உங்களை மிகுதியாய் ஆசீர்வதிப்பது நிச்சயம்.