Loading...
Evangeline Paul Dhinakaran

காருணியத்தால் நம்மை இழுத்துக்கொள்கிற தேவன்!

Sis. Evangeline Paul Dhinakaran
11 Aug
தேவனுடைய அன்பை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் தவறு செய்கிறபோதும், அவர் உங்களை நேசிக்கிறவராகவே இருக்கிறார். தேவ அன்பு உங்களை சூழ்ந்துகொள்ளும்போது நீங்கள் எல்லா தீங்குக்கும் விலக்கி காக்கப்படுவீர்கள். ஆகவே மனம் சோர்ந்துபோகாதிருங்கள்! நம்முடைய தேவன் மிகுந்த கிருபை நிறைந்தவர். அவருடைய அன்பினால் நம்மை மூடிக்கொள்வார். நீங்கள் எந்த நிலைமையிலிருந்தாலும் அவர் உங்களை நேசிக்கிறார். சாத்தானுக்கு உங்கள் வாழ்வில் இடங்கொடுத்து, அவனுடைய தவறான போதனைகளுக்கு செவிகொடுக்காதீர்கள். ஜீவனுள்ள தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்து அவரை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். 

நான் ஊழியத்திற்காக ஒருமுறை என் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு கூட்டம் முடிந்த பிறகு, நாங்கள் வேடிக்கை உலகம் என்ற இடத்திற்கு சென்றிருந்தோம். அங்கு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் மெழுகு பொம்மைகளைப் பார்த்தோம். அவைகளை பார்த்த மற்ற ஜனங்கள் புன்முறுவலையும், கைகளை தட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், அவ்விடத்தை கடந்து வெளியே செல்லும்போது ஜனங்கள் தங்கள் மகிழ்ச்சியை இழந்துபோனார்கள். ஏனென்றால், அவர்கள் ஜனாதிபதி அவர்களோடு இல்லை.
இவ்விதமான அன்பானது அவர்களுடைய தலைவர்களின் நினைவுகளை உயிருடன் வைத்திருப்பதன் மூலமாக ஏற்படுகிறது. ஆனால், நம் தேவனுடைய அன்பானது சதாகாலமும் நம்மில் நிலைத்திருக்கும் அன்பு. அவர் தமது அன்பின் காருணியத்தால் உங்களை இழுத்துக்கொள்ளுவார். உங்களைப் பாதுகாத்து, வழிநடத்துவதின் மூலம் அவர் தமது அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். உங்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் கடினமான பாதைகளின் வழியாக கடந்து செல்லும்போது, அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அந்த கடினமான சூழ்நிலையிலிருந்து அவர் உங்களை விடுதலையாக்கி, சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த இடத்திலே வைப்பார்.
Prayer:
அன்பின் தேவனே, 

நீர் என்மீது வைத்திருக்கும் நித்திய பேரன்பிற்காக உம்மை நன்றியோடு துதிக்கிறேன். என் வாழ்வின் இருளான நேரங்களில் உம்முடைய அன்பு என்னை சூழ்ந்துகொள்ளட்டும். மனதிற்கு அமைதி தரும் உம்முடைய பிரசன்னம் என்னில் நிலைத்திருக்க இரக்கம் பாராட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000