Loading...
Dr. Paul Dhinakaran

ஜீவ ஊற்றாகிய இயேசு!

Dr. Paul Dhinakaran
09 Jan
தேவனுடைய ஜீவஒளியில் தான் நாம் வெளிச்சத்தைக் காண்கிறோம். இருளில் வாழும் வாழ்க்கை துன்பமும், வலியும், வேதனையும், பிசாசின் கிரியைகளில் சிக்கித் தவிக்கிறதுமாயிருக்கிறது. ஆனால், இயேசு கிறிஸ்துவால் மட்டுமே நமக்கு இயற்கையான, அறிவான, ஆவிக்குரிய வாழ்க்கையை அருள முடியும். அவர் ஒருவரே நம்மை ஆசீர்வதித்து பிரகாசிக்கச் செய்ய முடியும். தேவனுடைய வெளிச்சம் உங்களுக்குள் வரும்போதுதான் நம்முடைய வாழ்வில் தேவன் வைத்திருக்கும் திட்டங்களையும் நோக்கங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும். இதை நாம் புரிந்துகொள்ளாமல் அவருக்கு விரோதமாய் முறுமுறுக்கிறோம். சூரியனை காண்பதற்கு நமக்கு மெழுகுவர்த்தியினுடைய வெளிச்சம் அவசியமில்லை. அதனுடைய சொந்த வெளிச்சமே பிரகாசிக்கிறதாயிருக்கிறது. அதுபோலவே நாம் நம்முடைய சொந்த வெளிச்சத்தினால் அல்ல, இயேசுவின் வெளிச்சத்திலே  வெளிச்சம் காண்போம். எழும்பி பிரகாசிப்போம். 

ஒருமுறை இயேசு ஒரு கிணற்றருகே தண்ணீர் எடுக்க வந்த சமாரியப் பெண்ணிடம் ஜீவ தண்ணீரைப் பற்றி பேசினார். அவளது கணவனை அழைத்து வரும்படி கூறினார். அவள் முதலில் தனக்கு கணவன் இல்லை என்றாள். ஆனால், இயேசுவோ நம் வாழ்க்கையை நன்கறிந்தவர். அவர் அவளிடம், “நீ உண்மையை சொன்னாய். உனக்கு ஐந்து கணவன்மார் இருந்தார்கள். இப்போதிருப்பவனும் உனது கணவனல்ல” என்றார். மகிழ்ச்சியான, சமாதானமுள்ள திருமண வாழ்க்கை அவளுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து ஜீவத் தண்ணீரை பெற்றுக்கொண்டபின் அவளது வாழ்க்கை சமாதானம் நிறைந்ததாய் மாறியது. நீங்களும் இன்றைக்கு அதே படகில் பயணிக்கிறீர்களா? ‘என் குடும்பத்தில் சமாதானம் இல்லையே’ என்று புலம்புகிறீர்களா?
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோவான்8:12) என்று சொன்ன இயேசுவை நோக்கிப் பாருங்கள். ஜீவ தண்ணீராகிய அவரண்டையிலே நீங்கள் எதையுமே மறைக்க அவசியமில்லை. சமாரியப் பெண்ணைப்போல இயேசு உங்களுக்கும் ஜீவத் தண்ணீரைக் கொடுத்து, உங்கள் வாழ்க்கையை மாற்றுவார். உங்களை புதுசிருஷ்டியாக்குவார். இதற்காகவே இயேசு உலகில் வந்தார். அவரண்டை வருவீர்களா? இதுவே தருணம், ஜீவஊற்று அவரிடத்தில் உண்டு. 
Prayer:
அன்பின் தகப்பனே,

உமது சிங்காசனத்தின் முன் முற்றிலும் என்னை ஒப்புவிக்கிறேன். சங்கீதக்காரனும், சமாரியப் பெண்ணும் ஜீவத் தண்ணீரை அனுபவித்தார்கள். அதேபோல உடைந்துபோன என் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் இல்லை. குடும்பத்தில் சமாதானம் இல்லை. எனது குடும்பத்தில் நித்திய ஜீவனை ஊற்றி, உம்முடைய பிள்ளையாக மாற்றும். உம்முடைய ஜீவத்தண்ணீரை பருகி இரட்சிப்படைந்து நித்திய சமாதானத்தோடு வாழ அருள்புரியும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000