Loading...
DGS Dhinakaran

கர்த்தரே உங்கள் துணை!

Bro. D.G.S Dhinakaran
10 Aug
இந்த வேகமான உலகில் நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியில் நாம் ஜெப வாழ்க்கையை மறந்து போகிறோம். நம் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது நம்முடைய முழு கவனமும் கஷ்டங்களின்மீது திசை திருப்பப்படுகிறது. நம்முடைய பிரச்சினைகளைவிட நம்முடைய தேவன் பெரியவர் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். ஆகவே, உங்களுடைய பிரச்சினைகள் எப்படியிருந்தாலும் சரி, தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு துணையாக நிற்பேன் என்று வாக்களித்திருக்கிறார். “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.” (சங்கீதம் 18:2)

1990-ம் ஆண்டு, எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்பு சில வருடங்களுக்குப் பிறகு என் இருதயத்தை பரிசோதனை செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தினர். அந்த பரிசோதனையை செய்யும்படி மருத்துவ உபகரணங்களை எங்கள் வீட்டிற்கு எடுத்து வந்திருந்தனர். மருத்துவர் அவர் பணியை செய்ய ஆரம்பித்தார். நான் என் வேலையை செய்ய தொடங்கினேன். அதாவது சுகமளிக்கும் தேவனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தேன். இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஒரு தெய்வீக தொடுதலை நான் உணர்ந்தேன். ஆம்! கர்த்தர் எப்பொழுதும் தமது பிள்ளைகள்மீது அக்கறை உள்ளவராயிருக்கிறார்.  
தேவனாகிய கர்த்தர்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும்போது, அவர் உங்கள் பிரச்சினைகள் யாற்றினின்றும் உங்களை விடுதலையாக்கி, பிசாசின் கிரியைகளுக்கு உங்களை விலக்கி பாதுகாப்பார். உங்களுடைய துயரங்கள், நோய்கள் மற்றும் கஷ்டங்கள் ஆகியவற்றின் மத்தியிலும் உங்களை விடுவிப்பேன் என்று ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (சங்கீதம் 91:15) என்று ஆண்டவர் கூறுகிறார். ஆகவே, ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். உங்கள் பிரச்சினைகளில் தேவனுடைய வாக்குறுதிகளை உரிமையாக்கிக்கொள்ளுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய பாதுகாப்பை குறித்து தைரியமாய் அறிவித்ததுபோல, நீங்களும் தைரியமாயிருங்கள்.
Prayer:
ஆசீர்வாதத்தின் தேவனே,

உம்முடைய வாக்குத்தத்தங்களுக்காக நன்றி கூறுகிறேன். என்னுடைய கடினமான பாதைகளின் வழியே நான் கடந்து செல்லும்போது, உம்முடைய கிருபை எனக்கு துணைநின்று என்னை தேற்றுவதாக. நீர் எப்போதும் என்னோடுகூட இருக்கிறபடியால் உமக்கு நன்றி. நீர் ஒருநாளும் என்னை கைவிடமாட்டீர் என்று விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000