Loading...
Dr. Paul Dhinakaran

உங்கள் கண்ணீரைக் காண்கிற தேவன்!

Dr. Paul Dhinakaran
11 Oct
பழைய ஏற்பாட்டிலுள்ள, உபாகமம் புத்தகம் ‘இரண்டாம் சட்டம்’ என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது மோசேயினால் எழுதப்பட்டது. தேவன் தமது ஜனங்களான இஸ்ரவேல் மக்களுக்காக கொடுத்த பத்து கற்பனைகளும் இதில் அடங்கியிருக்கிறது. நீங்கள் எவ்வளவாய் தேவனுடைய கற்பனைகளை உண்மையாய் கைக்கொள்ளுகிறீர்களோ, அவ்வளவாய் தேவன் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் ஆசீர்வதிப்பார்.  

காருண்யா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஒருவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகியும், குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. அவர்களது முதல் குழந்தை கர்ப்பத்திலிருக்கும்போதே இறந்து பிறந்தது. இரண்டாவது பிறந்த குழந்தையும் மரித்துப்போனது. இதனால், அவர்கள் தாங்கொணா பாடுகளினூடே கடந்து சென்றனர். அவர்களது வீட்டிற்கு சென்று ஜெபித்த ஒருவர், “நீ பயங்கரமான பாவஞ்செய்துள்ளாய்; ஆகவே, ஒவ்வொரு முறையும் நீ கருத்தரிக்கும்போது, உன் குழந்தை இறந்து போகிறது; உனக்கு இனி குழந்தையே இராது” என்றார். இதைக்கேட்ட சகோதரியின் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது. செய்வதறியாது திகைத்த சகோதரி, கண்ணீருடன், “ஆண்டவரே, யாராவது எனக்காக ஜெபிக்கமாட்டார்களா?” என்று கதறிய அதேநேரத்தில் ஆவியானவர் எனக்கு ஒரு உந்துதலை தர, நான் தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு, “எப்படியிருக்கிறீர்கள்?” என்று விசாரித்து, “உங்களுக்காக ஜெபிக்கும்படி ஆவியில் உணருகிறேன்” என்றேன். அவர்களது நிந்தைகளை நிர்ப்பந்த நிலைமையைப்பற்றி அறிந்ததும், நானும் ஆண்டவரிடம் மிகவும் அழுது அவர்களுக்காக ஊக்கமாய் ஜெபித்தேன். என்ன அதிசயம்! ஆண்டவர் அவர்கள் கர்ப்பத்தை ஆசீர்வதித்தார். 14 வருடங்கள் குழந்தையற்றிருந்த அவர்கள் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். 
ஆம், நம் ஆண்டவர் நல்லவர்! அவர் ஒருபோதும் உங்கள் ஜெபத்தை புறம்பே தள்ளமாட்டார். அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிற தேவன். நீங்கள் நீண்ட நாட்களாக வேதனையில் உழன்று தவிக்கிறீர்களா? ஆண்டவர் உங்கள் குறைவையெல்லாம் நீக்கி, உங்கள் இருதயத்தின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவார்.  அவர் “உங்கள்மீது அன்பு வைத்து உங்களை ஆசீர்வதிப்பார்” (உபாகமம் 7:13). ஆகவே, எப்பொழுதும் உற்சாகமாயிருங்கள்!
Prayer:
என் அன்பு பரம தகப்பனே,

இந்த அருமையான சாட்சியின் மூலமாக, நீர் என்னை உற்சாகப்படுத்தியதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர். என் இருதயத்தின் விருப்பங்களை உமது மகிமைக்காக தந்தருளும்படியாக நான் ஜெபிக்கிறேன். அப்படியே உம்மிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுகிறேன். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,  ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000