Loading...
Stella dhinakaran

கர்த்தர் ஐசுவரியத்தை தருவார்!

Sis. Stella Dhinakaran
14 Sep
பொருளாதார குறைவினால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் இல்லாமலிருக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவராக இருக்கலாம், “பொருளாதார நெருக்கடியான நேரங்களில் எப்படி தேவனுடைய ஆசீர்வாதத்தை பெறுவது?” என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது அல்லவா! ஐசுவரியமும் கனமும் தேவனாலே வருகிறது (1 நாளாகமம் 29:12) என்று வேதம் மிகத் தெளிவாய் கூறுகிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும்போது. உங்கள் பொருளாதார குறைவுகள் அனைத்தையும் அவர் மாற்றுவார்.  

நான் Bro.தினகரன் அவர்களை திருமணம் செய்யும்போது, அவருடைய சம்பளம் 160 ரூபாய். இதிலிருந்து 16 ரூபாயை நாங்கள் தசமபாகமாக எடுத்து வைத்துவிடுவோம். மீதியான பணத்தை வைத்து மாதம் முழுவதையும் எப்படி சமாளித்தோம் என்று நான் ஆச்சரியப்பட்டது உண்டு. ஆம், சம்பளம் வந்தவுடன்,  நாங்கள் குடும்பமாக முழங்காலில் நின்று தேவனுக்கு நன்றி செலுத்தி சம்பளத்திலிருந்து பத்தில் ஒரு பங்கை ஆண்டவருக்கு கொடுப்போம். குறைவுகள் வந்தபோதிலும் தேவன் எங்களை நிறைவாய் நடத்தினார். நாங்கள் சிறுமைப்பட்ட நேரத்திலும் ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்தோம். அவர் எங்களை ஆசீர்வதித்து அழகான ஒரு வீட்டை எங்களுக்கு கொடுத்தார். அற்புதமான வழியில் ஒரு காரை கொடுத்தார். எங்கள் வாழ்க்கையில் காணப்பட்ட நன்மைகளை பார்த்த சுற்றியிருக்கும் ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, தேவகிருபை எங்களோடிருக்கிறதை கேட்டு அறிந்துகொண்டார்கள். இதன்மூலம் தேவநாமம் மகிமைப்பட்டது. 

இந்த ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள மூன்று காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்: முதலாவது உங்களை படைத்தவர் உங்கள் தேவைகளை சந்திக்க வல்லவர் என்பதை நீங்கள் முழுமையாக விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை தியானித்து மனதில் பதித்து கொள்ளுங்கள். உங்கள் ஆசீர்வாதங்களுக்காக வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி ஜெபியுங்கள். 
இரண்டவாதாக, உங்கள் சம்பளத்தை பெற்றபிறகு, “தேவனே, இம்மாதத்தின் தேவைகள் அனைத்தையும் இந்த பணத்தின் மூலம் சந்தித்தருளும். இந்த பணத்தை நீர் ஆசீhவதியும்” என்று பிரர்த்தனை செய்யுங்கள்.

மூன்றாவதாக, உங்கள் மாதாந்திர வருமானம் குறைவாயிருந்தாலும், அதிலிருந்து பத்தில் ஒரு பங்கை ஆண்டவருக்கென்று எடுத்து வையுங்கள். அப்பொழுது நீங்கள் நினைப்பதையும் எதிர்பார்ப்பதையும் விட தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பார் (மல்கியா 3:10). கர்த்தர் உங்களை நன்மையினால் நிரப்புவார். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்கள் செழிப்பைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். உங்களோடு ஆண்டவர் இருக்கிறார் என்று சாட்சி கூறுவார்கள். உங்கள் மூலம் தேவநாமம் மகிமைப்படும்.  ஆண்டவர் மட்டுமே உங்களுக்கு ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்து உங்களை உயர்த்த முடியும். அவரைப் பற்றிக்கொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Prayer:
அன்பின் தேவனே,
 
உம்முடைய கிருபையினால் நான் நன்மைகளை பெற்றுக்கொண்டமையால், அதிலிருந்து ஒரு பகுதியை உமக்கு கொடுக்கிறேன். நீர் தாமே என் சம்பளத்தை ஆசீர்வதித்து, குறைவை நிறைவாக்கும். எந்த பற்றாக்குறையும் என்னை அணுகாது என்று நான் விசுவாசிக்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் குறைவுகள் யாவையும் நீர் நிறைவாக்குவதற்காய் உமக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000