Loading...
Stella dhinakaran

போதித்து நடத்துகிற தேவன்!

Sis. Stella Dhinakaran
11 Feb
இந்த காரியத்தை அனுதினமும் எண்ணியெண்ணி கர்த்தரை போற்றிப் பாடுங்கள். தாவீது அப்படித்தான் செய்தான். ஏனெனில், கர்த்தர் நமக்கு இரங்கி, நமக்கு செய்கிற அதிசயங்கள் எண்ணி முடியாதவை (சங்கீதம் 40:5). யோபு சொல்வதைப்போல். அவைகள் ஆராய்ந்து முடியாத, எண்ணி முடியாத அதிசயங்களும், பெரிய காரியங்களுமாயிருக்கிறது. அவ்வாறு அவைகளை எண்ணிப்பார்த்து, கர்த்தருக்கு நன்றி செலுத்தும்பொழுது, கர்த்தர் அதிலும் பெரிதான ஆசீர்வாதங்களாலும், நன்மைகளாலும் உங்களை நிரப்புவார். ஆம்! பிரியமானவர்களே, கர்த்தர் செய்கிற எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்களை எண்ணிப் பார்த்து அவைகளுக்காகவும், “நான் உனக்கு போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8) என்று ஆண்டவர் கூறும் வேத வசனத்தின்படி, அவர் அருளுகிற யோசனைகளுக்காகவும் நாம் நன்றி சொல்ல சொல்ல, கர்த்தர் நம்மீது பிரியமாயிருப்பார்.

ஒரு பக்தியுள்ள தாய், தன் பிள்ளைகள் சிறுபிள்ளைகளாயிருக்கும் பொழுதே, ஒரு பென்ஸில் வாங்கிக் கொடுத்தாலும், “அதை ஆலயத்திற்கு கொண்டு வந்து, ஆண்டவருக்கு நன்றி செலுத்து” என்பார்கள். புது ஆடை வாங்கிக்கொடுத்தால், “அதை அணிந்து வந்து, ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்து” என்று கற்றுக்கொடுப்பார்கள். இதினிமித்தம் அவர்களுடைய கடைசி மகள் அதை தன் வாழ்வில் உறுதியாகப் பிடித்துக் கொண்டாள். கர்த்தர் அவள் மேல் பிரியமாயிருந்தார். “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசாயா 60:22) என்ற வேத வசனத்தின்படி, அவளை ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பலுகிப் பெருகச் செய்தார். கர்த்தருக்கென்று அவள் எழும்பிப் பிரகாசிக்க ஆரம்பித்தான்.
கர்த்தருக்குள் பிரியமானவர்களே,  நிச்சயமாகவே கர்த்தர் உங்களை அற்புதமான வழியில் வழிநடத்துவார். நீங்கள் செய்கிற யாவற்றையும் கர்த்தருடைய பாதத்தில் அர்ப்பணியுங்கள். தேவன் செய்த எண்ணி முடியாத அற்புதங்களை எண்ணிப்பார்த்து, அவர் கொடுத்த ஆலோசனைக்காகவும், வழிநடத்துதலுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்களைச்சுற்றியிருப்பவர்களுக்கு அவர் உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவார். தேவசமூகத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். அவர் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பி, விடாய்த்ததும் வறண்டதுமான ஆத்துமாக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக பயன்படுத்துவார். 
Prayer:
கர்த்தாவே! 

உம்மைக் குறித்த காரியங்களை எண்ணிப் பார்க்கவும், அவைகளுக்காக நன்றி செலுத்தவும் எனக்கு நல்ல இருதயத்தைத் தாரும். எல்லாவற்றையும் உம் பாதத்தில் வைத்து நன்றி செலுத்தி கிரியைகளை  நடப்பிக்க கிருபை தாரும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 
 

1800 425 7755 / 044-33 999 000