Loading...
Dr. Paul Dhinakaran

மறு உத்தரவு கொடுக்கும் தேவன்!

Dr. Paul Dhinakaran
12 Jul
பிரியமானவர்களே, வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சினையினூடாக கடந்துசென்றாலும், கர்த்தர் நிச்சயமாக உங்கள் பிரார்த்தனையை கேட்டு பதிலளிப்பார். தேவன் உங்களுக்கு தர நினைத்திருக்கும் ஆசீர்வாதங்களை ஒருவராலும் தடைசெய்ய முடியாது. ஆண்டவருக்கும் உங்களுக்கும் இருக்கிற இடைவெளியோ அல்லது உங்கள் மீறுதல்களும், தவறுகளும் உங்களை தேவ அன்பிலிருந்து பிரிக்க முடியாது. நீங்கள் தேவனை நோக்கி கூப்பிடுகிற நேரங்களில் எல்லாம் அவர் உங்களுக்கு நிச்சயமாக மறு உத்தரவு கொடுப்பார். 

முதல் விண்வெளி வீரரான, நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்கு சற்று முன்பதாகவே சந்திரனில் கால் பதிக்க விரும்பினார்.  ஆனால் நாசா விஞ்ஞானிகள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  சந்திரனில் உள்ள காற்றழுத்தத்தை தாங்குவதற்கு அவருடைய இருதயம் பெலமுள்ளதாக இருக்கிறதா என்பதை சோதித்தறிய விரும்பினார்கள். அவருக்கான பரிசோதனைகள் முடிந்து, அவர் தகுதியுள்ளவர் தான் என்பதை சோதித்தப் பின்பே, அவரை சந்திரனில் கால்பதிக்க அனுமதித்தனர்.  ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் இவ்வளவு அக்கறை கொண்டவராக இருப்பாரெனில், நம்முடைய பரம பிதாவானவர் நம்மீது எத்தனை அக்கறையும், கரிசனையும் கொண்டவராக இருப்பார். அவர் நம்முடைய கூப்பிடுதலை கேட்காமலிருப்பாரா , நிச்சயமாகவே கேட்டு பதில் கொடுப்பார். 
தேவனுடைய மகத்துவத்தை நாம் ஒருநாளும் விவரிக்க முடியாது. தமது பிள்ளைகள் எப்பொழுதும் தன்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் செவிகொடுத்து, மகத்துவமான காரியங்களை அவர் உங்களுக்குச் செய்வார். நீங்கள் கேட்பதற்கு முன்பே, உங்கள் இருதயத்தின் வாஞ்சைகள் அவருக்குத் தெரியும். அவர் உங்களுக்கு பதில் கொடுப்பார். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்ற வேத வசனத்தின்படி, அவர்மீது முதலாவது உங்கள் முழு நம்பிக்கையையும் வைத்து, அவரை நோக்கி கூப்பிடுங்கள். அப்பொழுது, “அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசாயா 65:24) என்று கூறிய தேவன் உங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயம் பதில் தருவார். அரணும் கோட்டையுமான கிறிஸ்துவின்மேல் நீங்கள் கட்டப்பட்டிருக்கிறபடியால், உங்கள் நம்பிக்கை ஒருநாளும் வீண்போவதில்லை. தேவன் தாமதித்தாலும் உங்களுக்கு நன்மையானதை செய்வார். கவலைப்படாதிருங்கள்!
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே, 

உம்முடைய கிருபையால் என்னை பெலப்படுத்தும். உம்மை நாடி வந்தவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நான் அறிவேன்.  நான் எப்படிப்பட்ட சோதனைகளின் வழியாய் கடந்து சென்றாலும், நீர் என்னை விடுவித்து, மகத்துவமான காரியங்களை என் வாழ்வில் செய்தருளும். உம்மையே நம்பியிருக்கிறேன். என் பிரார்த்தனையைக் கேட்டு என்னை ஆசீர்வதியும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000