Loading...
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். (நீதிமொழிகள் 19:21)
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 3:16)
நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர். சங்கீதம் 23:5
என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். யோபு 23:10
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான பயப்படேன். சங்கீதம் 118:6
அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மத்தேயு 10:31
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். சங்கீதம் 5:12
அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். எரேமியா 31:3
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, ...என்னைப் பலப்படுத்தினார். 2 தீமோத்தேயு 4:17
நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். சங்கீதம் 46:10
நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்து விடவில்லை. ஏசாயா 41:9
அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். செப்பனியா 3:17
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரிந்தியர் 5:6
நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். சங்கீதம் 139:18
உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன். எரேமியா 15:20